வெள்ளி, 4 ஜனவரி, 2013

சிட்டு குருவி -என் கண்மணி


படம் : சிட்டு குருவி
பாடல் : என் கண்மணி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : P சுசீலா, SP பால சுப்ரமணியம்

என் கண்மனி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லையோ
நன்ன சொன்னேள் போங்கோ ….
என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஒராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லயோ ?
என் கண்மனி

இருமான்கள் பேசும்போது மொழியேதம்மா
பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா
ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில்
உறவன்றி வேறு இல்லை கவனங்களில்
இளமாமயில் அருகாமையில்
வண்டாடும் வேளை இன்பம் கோடி என்று
அனுபவம் சொல்ல வில்லயோ ?

இந்தாம்மா கருவாட்டு கூட முன்னாடி போ
என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஒராயிரம் கதை சொல்கிறான் கதை சொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லயோ ?
என் கண்மனி
தேனாம்பேட்டை சூப்பர் மார்கெட் இறங்கு…..

மெதுவாக உன்னைக் கொஞ்சம் தொடவேண்டுமே
திருமேனி எங்கும் விரல்கள் படவேண்டுமே
அதற்கான நேரம் ஒன்று வரவேண்டுமே
அடையாளச் சின்னம் அன்று தரவேண்டுமே
இரு தோளிலும் மணமாலைகள்
கொண்டாடும் காலமென்று கூடுமென்று
தவிக்கின்ற தவிப்பென்னவோ

என் கண்மனி உன் காதலி இள மாங்கனி
உனைப் பார்த்ததும் சிரிக்கின்றதேன் சிரிக்கின்றதேன்
நான் சொன்ன ஜோக்கைக் கேட்டு நாணமோ
நீ நகைச்சுவை மன்னன் இல்லயோ
என் மன்னவன் உன் காதலன் எனைப் பார்த்ததும்
ஒராயிரம் கதைசொல்கிறான் கதைசொல்கிறான்
அம்மம்மா இன்னும் கேட்கத் தூண்டுமோ
நீ ரசிக்கின்ற கன்னி இல்லயோ ?
என் கண்மனி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக